Monday, September 28, 2009

உயிர் இருந்தால் மட்டும் போதுமா..?/உயிர் போனால்தான் பிணமா..?


இறப்புக்கு முந்தைய மக்களை வாழ்பவர்கள்,பிழைப்பவர்கள் என இருபிரிவாக்கலாம்!
மன நலம், உடல் நலம், சமூகக்குழுக்கள், சமுதாய அளவுகோல்களின்படி பாராட்டத்தக்க வாழ்க்கை போன்றவற்றை தன் மனதிற்கு இனியவகையில், சமுதாய நெறிகளுக்கும் உட்பட்டு , அடைந்தவர்களை "வாழ்பவர்கள்" எனக்கொள்வோம். (இதில் மிகச் சொற்பமானவர்களே அடங்குவர்!)

நெறிமுறைகள் எதுவுமின்றி அங்கீகாரத்தையும், பாராட்டுதல்களையும் அடைபவர்களையும், (கெட்டிக்காரம்ப்பா...!பிழைக்கத்தெரிஞ்சவம்ப்பா..!) ஏதோ போய்க்கிட்டுஇருக்கு என் ஒரு சூழலில் உழல்பவர்களையும் "பிழைப்பவர்கள்" எனக் கொள்வோம்!

(இதில்தான் அநேக கோடிப்பேர்!)

வாழவும் தெரியாமல், பிழைக்கவும் முடியாமல் மனநோயாளியாய் இருப்பவர்கள் ஒரு பிரிவு!

பிழைக்க வழியின்றி, மனநோயாளியாகவும் ஆகாத ஒரு நிலை இருக்கிறது! உட்லைச் சுமந்து திரியும் நிலை!

முகாம்க்ளில் வதைபடும் தமிழர்களின் நிலை இப்படித்தான் இருக்கிற்து!

ரை இல்லை. இட நெருக்கடி, திடீரென வந்து போகும் தண்ணீர் லாரிகள், வீசியெறியப்படும் உணவுப்பொட்டலங்கள், கண்னெதிரே இறக்கும் உற்வுகள்..!

ஒரு மாட்டை வண்டிக்காரன் வதைத்ததைப் பார்த்த போதே ஒரு ஆங்கில எழுத்தாழனுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டதாம்! இத்தனையையும் அனுபவித்த மக்கள் எதிர்காலத்திற்கானஎந்த நிச்சயமும் இன்றி உடலைச் சுமந்து திரிகிறார்கள்!

பிரபாகரன் கொல்லப்பட்டதாய் செய்தி வந்த அன்று, லண்டன் வாழ்பெண் ஒருவர் "ஒரு இனமே அழிக்கப்படுகிறதே..! கேட்கவே ஆளில்லை..! இருந்த ஒரு தலைவனையும் கொன்னுட்டாங்க..! என்ன கொடுமை இது..!" என்று கதறினார்.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு!" -என்றான் பாவேந்தான்.

போரெல்லாம் கூட வேண்டாம். இருக்கும் அரசியல் அதிகாரத்தைக் கூட பயன்படுத்தவில்லையே நாம் !

மக்கள் ஈராக்கிலும் இப்படித்தான் கொல்லப்பட்டார்கள். காஷ்மீர், இஸ்ரேல் எங்கும் யுத்தம் முடிவதாய் இல்லை.

தீவிரவாதத்தையும் நம்பாமல், சுயலாப அரசியல் கோமாளிகளையும் சாராமல் உலக மக்கள் யாவருக்குமான அதிகாரமும், செயல்பாடும் கொண்ட மக்கள் அமைப்பு சாத்தியமாகுமா !

2 comments:

இரசிகை said...

nallayirunthathu....

konjam spelling mistakes...thiruththidungalen.

ஜோதிஜி said...

சுயலாப அரசியல் கோமாளிகளையும் சாராமல்

இது தான் நண்பரே என்னுடைய நோக்கம். வெறுப்பு விருப்பு இன்றி. உங்கள் சிந்தனை சிதறல்கள் மிக அற்புதமாக இருக்கிறது. காதலுக்கு உண்டான வார்த்தைகள் மிக மிக ரசித்தேன். அதுவும் கடைசியில் மெய்ஞானத்தில் கொண்டு வந்த விதம்?

Post a Comment