Monday, September 28, 2009

உயிர் இருந்தால் மட்டும் போதுமா..?/உயிர் போனால்தான் பிணமா..?


இறப்புக்கு முந்தைய மக்களை வாழ்பவர்கள்,பிழைப்பவர்கள் என இருபிரிவாக்கலாம்!
மன நலம், உடல் நலம், சமூகக்குழுக்கள், சமுதாய அளவுகோல்களின்படி பாராட்டத்தக்க வாழ்க்கை போன்றவற்றை தன் மனதிற்கு இனியவகையில், சமுதாய நெறிகளுக்கும் உட்பட்டு , அடைந்தவர்களை "வாழ்பவர்கள்" எனக்கொள்வோம். (இதில் மிகச் சொற்பமானவர்களே அடங்குவர்!)

நெறிமுறைகள் எதுவுமின்றி அங்கீகாரத்தையும், பாராட்டுதல்களையும் அடைபவர்களையும், (கெட்டிக்காரம்ப்பா...!பிழைக்கத்தெரிஞ்சவம்ப்பா..!) ஏதோ போய்க்கிட்டுஇருக்கு என் ஒரு சூழலில் உழல்பவர்களையும் "பிழைப்பவர்கள்" எனக் கொள்வோம்!

(இதில்தான் அநேக கோடிப்பேர்!)

வாழவும் தெரியாமல், பிழைக்கவும் முடியாமல் மனநோயாளியாய் இருப்பவர்கள் ஒரு பிரிவு!

பிழைக்க வழியின்றி, மனநோயாளியாகவும் ஆகாத ஒரு நிலை இருக்கிறது! உட்லைச் சுமந்து திரியும் நிலை!

முகாம்க்ளில் வதைபடும் தமிழர்களின் நிலை இப்படித்தான் இருக்கிற்து!

ரை இல்லை. இட நெருக்கடி, திடீரென வந்து போகும் தண்ணீர் லாரிகள், வீசியெறியப்படும் உணவுப்பொட்டலங்கள், கண்னெதிரே இறக்கும் உற்வுகள்..!

ஒரு மாட்டை வண்டிக்காரன் வதைத்ததைப் பார்த்த போதே ஒரு ஆங்கில எழுத்தாழனுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டதாம்! இத்தனையையும் அனுபவித்த மக்கள் எதிர்காலத்திற்கானஎந்த நிச்சயமும் இன்றி உடலைச் சுமந்து திரிகிறார்கள்!

பிரபாகரன் கொல்லப்பட்டதாய் செய்தி வந்த அன்று, லண்டன் வாழ்பெண் ஒருவர் "ஒரு இனமே அழிக்கப்படுகிறதே..! கேட்கவே ஆளில்லை..! இருந்த ஒரு தலைவனையும் கொன்னுட்டாங்க..! என்ன கொடுமை இது..!" என்று கதறினார்.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு!" -என்றான் பாவேந்தான்.

போரெல்லாம் கூட வேண்டாம். இருக்கும் அரசியல் அதிகாரத்தைக் கூட பயன்படுத்தவில்லையே நாம் !

மக்கள் ஈராக்கிலும் இப்படித்தான் கொல்லப்பட்டார்கள். காஷ்மீர், இஸ்ரேல் எங்கும் யுத்தம் முடிவதாய் இல்லை.

தீவிரவாதத்தையும் நம்பாமல், சுயலாப அரசியல் கோமாளிகளையும் சாராமல் உலக மக்கள் யாவருக்குமான அதிகாரமும், செயல்பாடும் கொண்ட மக்கள் அமைப்பு சாத்தியமாகுமா !

எப்படித்தான்../திரும்பிவரும் எதுவும்..

கண்ணு ஒளி எரிச்சதோ..
செவ்வொதடு கடிச்சதோ..

சின்ன இடை வெட்டிச்சோ..
நடை அழகு மிதிச்சதோ..

எப்படித்தான் செத்துச்சோ..
உசிரோடு இருந்த எம்மனசு.!
----------------------------------------------------------

அழுவதையும்

அடம்பிடிப்பதையும்

விட்டுவிடத்தான் நேர்கிறது..


அப்புறமென்ன..!

ஆறுதல்களுடனும்

தேறுதல்கள்டனும்

தொடர்கிறது வாழ்க்கை.


பின் ஒரு நாளில்

தேடி எடுத்தோ

சட்டென்றோ

தொலைந்தவை எதிர்ப்படலாம்


ஆனால் திரும்பி வரும் எதுவும்

பழையது போல் இருப்பதில்லை !

பசங்க /ஸ்லம் டாக் மில்லியனர்.

ஆனந்த விகடனில் வந்த 52 மார்க், இன்னொரு இதழில் வெளிவந்த இயாக்குனரின் பேட்டி,T.V.ரேட்டிங் எல்லாம் பசங்க படம் பார்க்கும் ஆவலை தூண்டியது..


எளிமையும்,கதைகளத்தை தாண்டாத திரைக்கதையும் மிக முக்கியமாய் குறிப்பிடவேண்டியது.திரைக்கதையில் லாவகம் இருக்கிறது.தனி காமடி டிராக்,கிளாமர் டிராக் போன்ற தந்திரங்கள் இல்லை.அந்த வாத்தியார் கேரக்டர் மனதில் நிற்கிறது.எதிர் வீட்டு பையனை அடிப்பது,சண்டையின் போது 'வீட்டை விட்டு காலி பண்றேன் பார்' என்பது..கவனிக்க வேண்டிய காட்சிகள்!அந்த கேரக்டர் கம்பீரமாக படைக்கப்பட்டிருந்தாலும் ,ஹீரோ வொர்ஷிப் இல்லாதபடி இயல்பாய் இருக்கிறது.இயக்குனரிடம் எதிர்பார்க்கலாம்!


ஆரம்ப காட்சியில் ஒரு 'ஸ்டார்ட்' க்காகவும், மனதில் நிற்க வேண்டும் என்று இறுதிகாட்சியின் நீளத்திலும் கொஞ்சம் 'சினிமா' இருக்கிறது.மொத்தத்தில் இதுவும் உறுத்தாத குறைதான்.


'ஸ்லம் டாக் மில்லியனர்' படமும் பார்த்தேன்.இந்தியாவை அவமானப்படுத்தியது தவிர வேறென்ன இருக்கிறது அதில்?!உண்மையான நிலை சிறிது இருந்தாலும் கமர்சியலாகத்தான் கையாளப்பட்டுள்ளது.


டெக்னிகல் விசயங்கள், 'ஒன் லைனரை' பிரமதமாக்கும் திரைக்கதை,ஸப்டில் ப்ளே..எல்லாம் நமக்கு கைவந்து விட்டது!ஆஸ்கர் போன்ற விருதை அதன் சகல விளம்பரங்களுடன் உருவாக்கி மற்றவர்களுக்கு நாம் கொடுக்கலாம்!


அவஸ்தை..

அவஸ்தை...


அவளின்

கொலுசொலியில்

நிமிர்ந்து,

கண்னொளியில்

கவிழ்வது!
----------------------------------------------------------------------

ஏன்..


ஏன் கண் எறிந்தாய்?

என் மனக்குளத்தில்

பேரலைகள்..

வாழ்க்கை வசப்படுமா...


"வாழ்க்கை என்பது என்ன என்று தெரிவதற்குள் பாதி வாழ்க்கை கடந்துவிடுகிறது" எனவும் "25 வயதில் உலகமே நம்மைப் பார்ப்பது போல் தோன்றும்..,30 வயதில் உலகத்தை நாம் தெளிவாகப் பார்ப்பது போல் தோன்றும்..,60வயதில்தான் உலகத்தில் ஒருவருமே நம்மைப் பார்க்கவில்லை எனப் புரியும்.." எனவும் படித்தேன்

இதைப்போல் ஆயிரமாயிரம் சிந்தனைகள் இருந்தாலும் ,'இதுதான் வாழ்க்கை' என்ற உறுதியான வரையரை ஒன்றும் இல்லை.இந்த வரையரை அற்ற தன்மைதான் வாழ்க்கையை சுவராசியமாக்குகிறதோ..?!

'எல்லாம் மனசுலதான் மாமூ!'-என டாஸ்மாக் வாசலில் இருந்து 'ஆட்டிட்யூட் இஸ் இம்பார்ட்டன்ட்!'-என கார்ப்ரேட்ஸ் வரை மனப்பாங்கே வாழ்வைத் தீர்மானிக்கிறது என அனைவரும் அறிகிறோம்!

மன ஓட்டத்தை நீரோட்டத்துடன் ஒப்பிட முடியாது. நில்லாமல் ஓடினாலும் பெரும்பாலும் இரு கரைகளுக்கிடையே ஓடுகிறது.வெள்ளம், நீர்வீழ்ச்சி,சுழல் என சில வடிவங்களே எடுக்கிறது.ஆழ்மனதை வேண்டுமானால் கடலுடன் ஒப்பிடலாம்!காற்றுடன் ஒப்பிடுவது ஓரளவு சரியாக இருக்கும்.வியாபித்துள்ள தன்மை,இன்றியமையாமை,ஆற்றல்.வேகம் என காற்றோட்டமும்,மனஓட்டமும் ஒத்துப்போகிறது!

மனதுதான் வாழ்க்கைக்கான அடிப்படை எனத் தெரிந்தும் வீட்டிலும் பின் பள்ளி, கல்லூரிகளிலும் அதைப்ப்ற்றிய அறிவு,செயல்முறைகள் என எதுவும் நடைமுறையில் இல்லை.தினசரி நடவடிக்கைகள்,பேசும்,பழகும் முறைகளை நெறிப்படுத்துவதன் மூலம் மனதை நெறிப்படுத்தலாம் என்ற 'ரிவர்ஸ் பிராஸஸ்' பின்பற்றப்படுகிறது!

ஆன்மிக வழிபாடுகள்,சடங்குகள் எல்லாம் இந்த ரிவர்ஸ் பிராஸஸ்தான்.இதில் தியான முறைகள் நேரடியாக மனதைப் பற்றி பேசுகின்றன.

மனதை கட்டுக்குள் வைத்து வாழ்வை வசமாக்குவது இருக்கட்டும்..,யதார்த்த உலகில் பிழைக்கவாது வேண்டுமே!

பொருளாதாரம் ஒன்றுதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.'உலகப் பொருளாதாரம்' நடைமுறைக்கு வந்த பின்பு, கடந்த 15 வருடங்க்ளில் நம் பொருள் சார்ந்த வாழ்வு பெரும் மாறுதலுக்கு உட்பட்டுவிட்டது.கன்ஸ்யூமர் யுகத்தில் பொருள்களை வாங்கிக் குவிக்கிறோம்!மனிதர்களைப் பயன்படுத்தவும்,பொருள்களை மதிப்பதுமான ஒரு நிலை வந்து விட்டது!

டி.வி.சேனல்கள், மொபைல் போன்கள்,கம்ப்யூட்டர்கள் போன்றவை மனித உறவுகளுக்கிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லதாய் இருக்கின்றன.

தனிக்குடித்தனங்கள்தான் வாழ்க்கைமுறையாகிவிட்டது.மாணவர்களிடமும் தெருவுக்கு தெரு காணப்பட்ட குழுக்களும்,விடுமுறையில் விளையாடும் விளையாட்டுக்களும் மறைந்து போய்கொண்டிருக்கின்றன!

இந்த மாற்றங்களை விரைவாக உள்வாங்கிக்கொண்டு அதற்குத் தகுந்த வாழ்க்கை முறையை
நமது குழந்தைகளுக்கு அமைத்துத் தரும் கடமை நமக்கு இருக்கிறது!

தகவல்புரட்சி யுகத்தில் இருந்தாலும் தனிமனித நெறிகளும்,வாழ்க்கைக்கான மதிப்பீடுகளும் முக்கியமல்லவா?!

நாம் இதை உணர வேண்டும்! நம் குழந்தைகளுக்காவது வாழ்க்கை வசப்படட்டும்!

கோலங்கள்.

நெடுஞ்சாலை நடுவில்
நீளும்
வெள்ளைக் கோடுகள்.
நீ இட்டது போல்
நேர்த்தியாய் இருக்கிறது!

_________________________

முன் நெற்றியிலோ
புடவைத்தலைப்பிலோ
எப்பொழுதேனும்
காணக்கிடைக்கும்
கோலப்பொடித் தீற்றல்
உன்
கோலங்களை விட
அழகு பெறுகிறது!
__________________________

புள்ளிகளால்
கம்பிகளால்
வண்ணங்களால்
படைக்க இயலாத
மற்றொரு
அழகிய கோலம்
நீ மட்டுமே!
_________________

புள்ளிகள் இட்டு
கம்பிகள் இழுத்து
நடுவில் பூவும் வைத்து
நிமிர்கையில்
என்னைப் பார்த்தாய்!
இப்போது
அந்த பூவும், நானும்
சிறைக்குள்!

தொலைவில் நிற்பது!


தேர்தலில்
வாக்காளன்
தொலைவதை விடவும்

புகழ் ஒளியில்
ஆசிரியன்
தொலைவதை விடவும்

தேவைகள் முற்றானபின்
நண்பர்கள்
தொலைவதை விடவும்

வைபவஙகளில்
உறவுகளின ஆதிக்கத்தில்
அன்பானவன் தொலைவதென்பது
துக்ககரமானது.

ஆனால் எங்கும்
நிகழ்வது!

இவர்களின் பார்வையில் வாழ்க்கை.

தலகீழா பொறக்குறான்...தலகீழா நடக்குறான், ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்னுக்கள்ளே...,என்று
எத்தனை பாடல்கள் வாழ்க்கையப் பற்றி.
வாழ்க்கை தத்துவங்களிலோ,பாட்ல்களிலோ இல்லை.அனுபவம்தானே வாழ்க்கை!

ஒரு நான்கு பேர் ,அவர்களின் அனுபத்தை பாடமாக்கினால்..

கசாப்புக்கடைக்காரர்:
கண் பார்க்கனும்,கை செய்யனும்! கத்தி படபடன்னு விழனும்..எப்ப வேணா கைல படலாம்.பயந்தா பொழைக்க முடியுமா?வெட்டி பொட்டலம் போட்டு போய்க்கிட்டே இருக்கனும்!

டீ மாஸ்டர்:
சர்க்கரை கம்மியா இருக்கிற டீக்கு சர்க்கரைய அடையாளமா வைக்குறோம்.அது மாதிரிதான்.பார்க்க ஒன்னா பழக ஒன்னா இருப்ப்ங்க..ஆராய்ச்சி எல்லாம் பண்னாம சூடா டீ சாப்பிட்டமா..,எடத்த காலி பண்னமானு போய்க்கிட்டே இருக்கனும்.

மெக்கானிக்:
ஒவ்வொரு வண்டியும் ஒவ்வொருத்தருக்கு செட்டாகும்! பள்ளம் வந்தா கியர டவுன் பண்னி, நல்ல ரோட்ல வெரட்டி போகவேண்டியதுதான்.மெய்ன்டெனென்ஸ் வேணும் சார்!

பலூன் விற்பவர்
இந்தா சார்.. நீயும் ஊது, நானும் ஊதுறேன்! உன் மூச்சு.என் மூச்சுன்னு என்ன வித்தியாசம் இருக்கு!கட்டு டைட்டா இருக்கிற வரைக்கும் காத்து இருக்கும்,காத்து இருக்கிற வரைக்கும் பிள்ளைகள் விளையாடும். நாமளும் இருக்கிற வரைக்கும் அடுத்தவங்கள சந்தோஷமா வைச்சுட்டு கிளம்ப வேண்டியதுதான்..

எழுதக்கூடாத கவிதை.

மனதின் ஈரத்தில்
முளைத்து எழுந்தது
அந்தக் கவிதை.

மரபை மீறியதென்று
மாமக்கள் சினந்தனர்.
எச்சரித்தனர்.
வாள் கொண்டு கிழித்தனர்.

காயங்கள் ஆறிய
என் கையிலும் இருக்கிறது
கூரிய வாள்!

மனதின் ஓரத்தில்
அந்தக் கவிதையும்!

பொருளிலார்க்கு.

பசுவும்,பாண்டமும்
மனிதனை அளந்தது
ஆரிய காலம்.

பொன்னும் பொருளும்
அதையே செய்யும்
நவீன காலம்.

இருப்போர்
இரங்குவதிலை.
இல்லாதோர்
நிமிர்வதில்லை.

மனிதம் வாழ்வதாயில்லை.
எக்காலத்திலும்.

எத்தனை கோடி சவங்கள்!

மு.க.அழகிரி பார்லிமெண்டில் பேசுவாரா?..ஜெ கேள்வி:


தமிழில் பேச வழியில்லாததால் மு.க.அழகிரி தமிழில் பேசவில்லை.தொன்மையான மொழியான தமிழில் பேச கருனா நிதி ஏன் போரடவில்லை ..,அவர் பேசாமல் இருப்பதே நல்லது என நினைத்துவிட்டாரோ என்று கேட்டிருக்கிறார் ஜெ.

________________________________________________________

முலாயம் சிங் ,கல்யான் சிங்,பால் தாக்கரே,ஜெயில் சிங்,ராஜ் நாத் சிங்,மன்மோகன் சிங்,ஜெயலலிதா எல்லோரும் உத்தரபிரதேச கிராமமொன்றில் ஒரு குடிசையில் வசிக்கின்றார்கள்.அவர்களின் தாய் சாப்பிட்டு மூன்று நாட்களாகிவிடது என்கிறார்.

48 வயதான மித்தாய் லால் பெயர் ராசியினால் தன் பிள்ளைகள் நன்றாய் வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் பெயரை வைத்திருக்கிறார்.

இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் கிடைக்க இருக்கிறது.,செயற்கை இதயம்!

மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டது.கரப்பான் பூச்சியின் இதயமோ 13 அறைகளைக் கோண்டது.இந்த அமைப்பினால் புவியில் அதிககாலம் தொடர்ந்து கொண்டிருக்கும் உயிரினமாக இருக்கிறது.இதை அடிப்படையாகக் கொண்டு ஐந்து அறைகள் கொண்ட செயற்கை மனித இதயத்தை, கரக்பூர் ஐ.ஐ.டி புரபஸர் சுஜாய் குஹா உருவாக்கியிருக்கிறார்

சோதனைகள் முடிந்து வெற்றி பெறும் தருவாயில் இருக்கும் முயற்சி கைகூடினால் மிகக் குறைந்த விலையிலும் இருக்கும்.அமெரிக்காவில் முப்பது லட்சங்களுக்கு கிடைகும் செயற்கை இதயமானது ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும்.

இன்றய நிலையில் ,உலக அள்வில் சுமார் இரண்டு கோடி பேர் செயற்கை இதயத்திற்கான தேவையுடன் உள்ளனர்.சுமார் முப்பது சதவீதத்தினரே தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

சுஜாய் குஹாவினால் எண்ணற்றோர் பயனடைய வாய்ப்பு உள்ளது.

சமீப காலமாக இந்திய மருத்துவ சேவை சிறந்து வருகிறது. உலகத் தரம் வாய்ந்த அறுவை சிகிச்சைககள் இங்கு நடை பெறுகின்றன.சென்னை முக்கிய இடத்தை வ்கிப்பது குறிப்பிடப்படவேண்டியது.

எளிய மக்களுக்கும் எல்லாம் கிடைத்தால் நன்றாயிருக்கும்.தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் நல்வரவாய் தெரிகிறது.வழக்கமான முறைகேடுகள் இன்றி மக்கள் பயனடைந்தால் பாராட்டலாம்.

சுழல்.

ஆசை வளர்த்து
ஆசை அழித்து,

கனவில் உயிர்த்து
நினைவில் கொன்று,

இரவில் விழித்து
பகலில் சோர்ந்து,

வேளை மறந்து
வேலை செய்து,

உன்னை மறக்க
உன்னை நினைத்து

பார்க்க மறுத்து
மறுத்துப் பார்த்து,

பார்த்துப் பேசி
பேசியதை நினைத்து,

ஆசை வளர்த்து,
ஆசை அழித்து...