"வாழ்க்கை என்பது என்ன என்று தெரிவதற்குள் பாதி வாழ்க்கை கடந்துவிடுகிறது" எனவும் "25 வயதில் உலகமே நம்மைப் பார்ப்பது போல் தோன்றும்..,30 வயதில் உலகத்தை நாம் தெளிவாகப் பார்ப்பது போல் தோன்றும்..,60வயதில்தான் உலகத்தில் ஒருவருமே நம்மைப் பார்க்கவில்லை எனப் புரியும்.." எனவும் படித்தேன்
இதைப்போல் ஆயிரமாயிரம் சிந்தனைகள் இருந்தாலும் ,'இதுதான் வாழ்க்கை' என்ற உறுதியான வரையரை ஒன்றும் இல்லை.இந்த வரையரை அற்ற தன்மைதான் வாழ்க்கையை சுவராசியமாக்குகிறதோ..?!
'எல்லாம் மனசுலதான் மாமூ!'-என டாஸ்மாக் வாசலில் இருந்து 'ஆட்டிட்யூட் இஸ் இம்பார்ட்டன்ட்!'-என கார்ப்ரேட்ஸ் வரை மனப்பாங்கே வாழ்வைத் தீர்மானிக்கிறது என அனைவரும் அறிகிறோம்!
மன ஓட்டத்தை நீரோட்டத்துடன் ஒப்பிட முடியாது. நில்லாமல் ஓடினாலும் பெரும்பாலும் இரு கரைகளுக்கிடையே ஓடுகிறது.வெள்ளம், நீர்வீழ்ச்சி,சுழல் என சில வடிவங்களே எடுக்கிறது.ஆழ்மனதை வேண்டுமானால் கடலுடன் ஒப்பிடலாம்!காற்றுடன் ஒப்பிடுவது ஓரளவு சரியாக இருக்கும்.வியாபித்துள்ள தன்மை,இன்றியமையாமை,ஆற்றல்.வேகம் என காற்றோட்டமும்,மனஓட்டமும் ஒத்துப்போகிறது!
மனதுதான் வாழ்க்கைக்கான அடிப்படை எனத் தெரிந்தும் வீட்டிலும் பின் பள்ளி, கல்லூரிகளிலும் அதைப்ப்ற்றிய அறிவு,செயல்முறைகள் என எதுவும் நடைமுறையில் இல்லை.தினசரி நடவடிக்கைகள்,பேசும்,பழகும் முறைகளை நெறிப்படுத்துவதன் மூலம் மனதை நெறிப்படுத்தலாம் என்ற 'ரிவர்ஸ் பிராஸஸ்' பின்பற்றப்படுகிறது!
ஆன்மிக வழிபாடுகள்,சடங்குகள் எல்லாம் இந்த ரிவர்ஸ் பிராஸஸ்தான்.இதில் தியான முறைகள் நேரடியாக மனதைப் பற்றி பேசுகின்றன.
மனதை கட்டுக்குள் வைத்து வாழ்வை வசமாக்குவது இருக்கட்டும்..,யதார்த்த உலகில் பிழைக்கவாது வேண்டுமே!
பொருளாதாரம் ஒன்றுதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.'உலகப் பொருளாதாரம்' நடைமுறைக்கு வந்த பின்பு, கடந்த 15 வருடங்க்ளில் நம் பொருள் சார்ந்த வாழ்வு பெரும் மாறுதலுக்கு உட்பட்டுவிட்டது.கன்ஸ்யூமர் யுகத்தில் பொருள்களை வாங்கிக் குவிக்கிறோம்!மனிதர்களைப் பயன்படுத்தவும்,பொருள்களை மதிப்பதுமான ஒரு நிலை வந்து விட்டது!
டி.வி.சேனல்கள், மொபைல் போன்கள்,கம்ப்யூட்டர்கள் போன்றவை மனித உறவுகளுக்கிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லதாய் இருக்கின்றன.
தனிக்குடித்தனங்கள்தான் வாழ்க்கைமுறையாகிவிட்டது.மாணவர்களிடமும் தெருவுக்கு தெரு காணப்பட்ட குழுக்களும்,விடுமுறையில் விளையாடும் விளையாட்டுக்களும் மறைந்து போய்கொண்டிருக்கின்றன!
இந்த மாற்றங்களை விரைவாக உள்வாங்கிக்கொண்டு அதற்குத் தகுந்த வாழ்க்கை முறையை
நமது குழந்தைகளுக்கு அமைத்துத் தரும் கடமை நமக்கு இருக்கிறது!
தகவல்புரட்சி யுகத்தில் இருந்தாலும் தனிமனித நெறிகளும்,வாழ்க்கைக்கான மதிப்பீடுகளும் முக்கியமல்லவா?!
நாம் இதை உணர வேண்டும்! நம் குழந்தைகளுக்காவது வாழ்க்கை வசப்படட்டும்!
1 comment:
//மனிதர்களைப் பயன்படுத்தவும்,பொருள்களை மதிப்பதுமான ஒரு நிலை வந்து விட்டது!//
intha varikal yosikka vaikkirathu...!!
Post a Comment