பிறந்து விழுந்தவுடன்
நடக்கத் துவங்கியதை
அதிசயமாய் பார்த்ததுண்டு.
விளிம்புகளில் ஓடுவதில்
உடலின் பளபளப்பில்
லாவகமாய் உடல் வளைத்து
அந்தரத்தில் தாவுவதில்
மனசெல்லாம் கரைந்ததுண்டு.
தாயைச் சரியாக கண்டு
முட்டிப் பால் குடிக்கும்
மந்தையில் ஒருவனாய்
நின்றதுண்டு.
காதணி விழா ஒன்றில்
குறும்பாட்டுக்கறியை
ருசித்த நாள்வரை
மனதில் இருந்தன
ஆட்டுக்குட்டிகள்!
சாத்தா - கவனிக்கப்பட வேண்டிய நாவல்
5 weeks ago
5 comments:
அட போட வைக்கும் வரிகள்
பிரியமுடன்...வசந்த் said...
அட போட வைக்கும் வரிகள்
அதே அதே
வசந்த், நவாஸ் மற்றும் வலையில் இணைந்த அந்தோணி முத்து..மூவருக்கும் மிக்க நன்றி!
அன்பு வேல்ஜி,
முதலாய் உங்கள் கவிதைக்கு ஒரு பின்னூட்டம். எனக்கு உங்களில் ஹைகூ கவிதைகளில் இல்லாத ஒரு அட! ர(ரு)சித்ததில் இருந்தது.
மிக அழகான வரிகள்! இப்போது நிறுத்தியது எதை ரசிப்பதையா? ருசிப்பதையா? எனக்கு தெரிந்து இரண்டுமே சமகோட்டில் பயணிக்கலாம் தப்பில்லை. குறும்பாட்டு கறி சாப்பிடும் போது கவிமனம் செத்துவிடுவது இல்லை எனக்கு. ஆனால் ரசிக்கும்போது மாத்திரம், ருசி ஞாபகம் வருவதில்லை.
அன்புடன்
ராகவன்
வருகைக்கு நன்றி ராகவன்!
காமராஜ் அவர்களின் அடர் கருப்பில் உங்கள் செறிவான பின்னூட்டங்களை ரசித்திருக்கிறேன்.என் பக்கத்திற்கு வந்ததை மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
நீங்கள் சொல்வது சரிதான்.என் அனுபத்தில் ருசி அதிகமாகி விட்டதோ என்று தோன்றுகிறது!
Post a Comment