Thursday, September 30, 2010

புத்தகம்.




அலையும் மனசு

பக்கங்களுக்குள்

சிக்குவதில்லை

சில நேரங்களில்.



உலகைப்புறந்தள்ளி

எங்கோ சஞ்சரிக்கவும்

வாய்க்கிறது

சில புத்தகங்களில்.



முகம் மறைத்து

பிழைக்கவும் முடிகிறது

சிலரிடமிருந்து!


சரி!

ஒரு நல்ல மனிதனின்

வரவிற்குப் பின்

புத்தகத்தில் என்ன இருக்க முடியும்!

4 comments:

க.பாலாசி said...

சரிதானுங்க வேல்ஜி... அருமையான கவிதை...

ஹேமா said...

வேல்ஜி...புத்தகங்களைவிடச் சிறந்த நண்பனோ உற்ற துணையோ வேறு யார் !

உயிரோடை said...

கடைசி பத்தியில் எனக்கு உடன்பாடில்லை. மற்றபடி கவிதை அருமை

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

Post a Comment