Wednesday, August 18, 2010

நடிகர்கள் தேர்தலில் நிற்கத் தடை!


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அரசாங்க நலத்திட்டங்களோ வேறு சலுகைகளோ அறிவிக்கக்கூடாது என்ற தேர்தல் கமிஷனின் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.வாக்காளர்களை ஒரு தலைப்பட்சமாக ஓட்டளிக்கத் தூண்டுவதை தடுக்கவே இச்சட்டம் இருக்கிறது.

நடிகர்கள் சினிமாவின் மூலம்,பொய்யான பிம்பங்களின் மூலம் நியாயமற்ற முறையில் மக்களை தூண்டத்தானே செய்கிறார்கள்.

ஓட்டளிக்கும் வயது வந்த ஒருவன் தாய்,தந்தை,குரு அல்லது நண்பன் இவர்களில் யார் பேச்சையாவது இரண்டு மணி நேரம் தொடர்ந்து கேட்பானா? ஆனால் மக்களை கட்டிப்போடும் சக்தி சினிமாவுக்கு இருக்கிறது.

இதைத் திட்டமிட்டு பயன்படுத்துபவர்கள் உளவியல்ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

காலையில் பள்ளிக்கூட நேரத்தில் ரோட்டின் குறுக்கே வண்டியை நிறுத்தி வைத்து ஒருவன் இடையூறு செய்யும் போது 'அவ்ர்' வந்து காப்பாற்றி விடுவார் என நம்பும் மக்கள் நிஜ வாழ்வில் பொது நலனுக்கு போராடும் டிராபிக் ராமசாமியை தோற்கடிக்கிறார்கள்.

நடிகர்களுக்கு சினிமா உருவாக்கும் பிம்பம் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை.

வளர்ந்த கட்சிகளும் ஊடகங்களை தங்கள் வசம் வைத்துக்கொண்டு மாய பிம்பங்களை ஏற்படுத்துகின்றன.

தேர்தல் என்பது ஊடக பலம் உள்ளவர்களுக்கும்,இல்லாதவர்களுக்கும் இடையே நடக்கும் போது, உளவியல் ரீதியாக ஆராய்ந்து,முதலில் சொன்ன தேர்தல் கமிஷனின் சட்டம் சரி என்றால், நடிகர்கள் தேர்தலில் போட்டியிடுவது தவறுதானே

2 comments:

Unknown said...

அரசியல் மேடையில் இருப்பவர்களும் நடிக்கிறார்கள்...
நடிப்பவர்களும் அரசியல் பண்ணிக்கொண்டுதான் இருகின்றார்கள்....
இதில் யாரை தடை செய்வது.... ?
நடிப்பு என்பது தொழில் என்கிறார்கள்...சரிதான் !!
அரசியல் என்பது ?
Now the value is measured by counting money...not the life

பா.ராஜாராம் said...

வேல்ஜி,

எவ்வளவு காலம் ஆச்சு! வந்ததும் ரெண்டு மூணு பதிவு போட்டாச்சு போல. ஞானம் கவிதை பிடிச்சிருக்கு வேல்ஜி.

Post a Comment