Monday, August 9, 2010

எந்ந்த்த்திரா...எந்ந்த்த்திரா...


மலேசியாவில் பிரம்மாண்டமாய் நடந்த எந்திரன் ஆடியோ ரிலீஸை இரண்டு நாட்களாய் தமிழகம் கண்டுகளித்தது.சுமார் ஆறுமணி நேர ஒளிபரப்பின் விளம்பர வருவாயிலும்,ஆடியோ விற்பனையிலும் தனது முதலை எடுக்க ஆரம்பித்திருக்கிறது சன் நிறுவனம்.

'உசுரே போகுதே...உசுரே போகுதே...' போன்று கேட்டவுடன் பிடிக்கும் பாடலோ, 'கடாக் கறி அது அடுப்புல கெடக்கு' என்று வித்தியாசமாய் தாக்கும் பாடலோ இல்லை.

படம் வெளியானபின் ரஜினியால் பாடல்கள் மேலும் ஹிட்டாகலாம்.
-------------------------------------------------------------------------------------

ரிஸ்ட் வாட்ச் போன்று ஒரு உபகரணம் கட்டிய இடது கையை தாங்கிப்பிடித்து,காலை விந்தியபடி குகை போன்ற பகுதிக்குள் நுழைந்தான் அவன். சுருண்டு கிடக்கும் பாம்பை பார்க்கிறான். சிகப்பும்,பச்சையுமாய்,ஒரு வெப்ப உடலாய், ஸ்கேன் செய்ததுபோல் திரையில் தெரிகிறது.அந்த ஆப்பிரிக்க அமெரிக்கன் படுத்து விடுகிறான்.வெர்ச்சுவல் ஸ்கிரீனில் தோன்றும் ஒருவர் உன் சார்ஜ் குறைவாக உள்ளது என்கிறார்.

அவன் நினைவிலிருந்து காட்சிகள் விரிகின்றன.

ஒரு ஆய்வகத்தில்,ஒரு சேரில் ரோபோவாக.. வெளிப்புறம் வயரும், நட்டும்,போல்ட்டுமாக அமர்ந்திருக்கிறான்.
விஞ்ஞானி அவனுடன் பேசியபடி வெளிப்புறம் எப்படி இருக்க வேண்டும் என்கிறார்.டி.வி.யில் பேஸ்கட் பால் விளையாடும் 'ஜோர்டனை' அவன் காண்பிக்க 'குட் டேஸ்ட்' என்று சிரிகிறார்.

'சோலோ' என்று பெயரிடப்பட்ட அவன் ஒரு ஆயுதமாக உருவாக்கப்படுகிறான்.15 பேரின் பலம் அவனுக்கு உண்டு.சில பைபர்களை கொண்டு உருவாக்கப்பட்டதால் சிறு ஆயுதங்களால் பாதிப்பில்லை என்று விஞ்ஞானி விளக்குகிறார்.

படதின் பெயர் தெரியாமல் பாதியிலிருந்து டி.வி.யில் பார்த்த ஆங்கிலப்படமிது.முழுதும் பார்க்கவும் இல்லை.
-------------------------------------------------------------------------------------

Sydney Sheldon-ன் Tell Me Your Dreams நாவல் படித்திருக்கிறீர்களா.

அது ஒரு ‘அந்நியின்’ கதை. நமது விக்ரம் அந்நியன் என்றால் கதை நாயகி 'அந்நி' தானே!

Multiple Personality Disorderஐ பற்றிய சுவராசியமான கதை அது.படித்து பாருங்கள்.

4 comments:

Jey said...

//Sydney Sheldon-ன் Tell Me Your Dreams நாவல் படித்திருக்கிறீர்களா.//

படிக்கலை velji... படிச்சி முடிச்சிட்டு அப்படியே கொரியர்ல அனுப்புங்க படிச்சிரலாம்..., ஓசி புக் படிக்கிறதுலதான் சுவையும், சுகமும் அதிகம் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//அது ஒரு ‘அந்நியின்’ கதை. நமது விக்ரம் அந்நியன் என்றால் கதை நாயகி 'அந்நி' தானே!//

;)

புதுசா இருக்கு விஷயங்கள்...!

Anonymous said...

ஆமாம் வேல்ஜி.சென்னை போயிருக்கும்போது நண்பர் 'நிழல்' திரு நாவுக்கரசைச்சந்தித்தோம்.நமது திரைப் படங்களின் அசல் கதைகள் குறித்துச்சொன்னார்.மலைப்பாய் இருந்தது.எலெக்ற்றானிக்ஸில் மட்டுமல்ல சினிமாவிலும் பைரேட்டுகள் தாயாரித்து மேலே made in india எழுதுகிற கில்லாடிகள் நாம்.

பஹ்ரைன் பாபா said...

"" Sydney Sheldon-ன் Tell Me Your Dreams நாவல் படித்திருக்கிறீர்களா.

அது ஒரு ‘அந்நியின்’ கதை. நமது விக்ரம் அந்நியன் என்றால் கதை நாயகி 'அந்நி' தானே!

Multiple Personality Disorderஐ பற்றிய சுவராசியமான கதை அது.படித்து பாருங்கள். ""

படித்திருக்கிறேன்.. மிக மிக சுவாரசியமாகவும்.. திகிலாகவும் இருக்கும்.. இந்த கதை..முடிவு மட்டுமே நம் மனதில் முடியாமல் இருக்கும்..

எந்திரன் பாட்டெல்லாம் சூப்பர்.. கேட்க கேட்க புது அனுபவத்தை தருகிறது

Post a Comment