Thursday, August 5, 2010

ஏய் ஞானம்...அப்பா ஞானம்...





குறைந்த நுழைவுக்கட்டணத்தில்
அதிகக் கூட்டம்.

இந்த நகரில் மூன்று நாள் மட்டும்...

குவளை குவளையாய் ஞானம்
வழங்கப்பட்டது.

தவளைப்பெண்களின் நாக்கு
பொன்னிறமானது.

ஞான குருவின் ஒளிவட்டம்
ஒரு சுற்று பெருத்தது.

ஒரு குவளை பருகிய நான்
ஞானத்தில் ஊறிக்கிடந்தேன்.

கொடையாளர்களை தெரிந்த ஒருவன்
ஞானகுருவானான்.

4 comments:

Jey said...

vel, கலக்குப்பா, எனக்குதான் இந்த கவிதை எழுத வரமாட்டீங்குது. தமிழ்மனம், இண்ட்லில இனைச்சிரு நெறய பேர் படிப்பாங்க.
இன்னிக்கு நெட் பக்கம் வர முடியலை அதான் லேட் பின்னூட்டம்.

கவிதை சூப்பர்:)

ப்ரியமுடன் வசந்த் said...

//கொடையாளர்களை தெரிந்த ஒருவன்
ஞானகுருவானான்.//

ஞானகுரு பஞ்ச் அர்

//Jey said....
இன்னிக்கு நெட் பக்கம் வர முடியலை அதான் லேட் பின்னூட்டம்.//

புழுகல் மன்னன் ஜெய் வாழ்க

Jey said...

ப்ரியமுடன் வசந்த் said...

புழுகல் மன்னன் ஜெய் வாழ்க///

பங்காளி, எங்க போனாலும் தேடி வந்து கும்முறியே, உமக்கு மனசாட்சியே இல்லய்யா, இல்ல எங்காவது அடகு வச்சிட்டீரா..., உனக்கு இருக்குடி... ஒருநா நல்லா மாட்டும்போது.....

velji said...

யாருப்பா அது...சொம்ப எடுத்து வை! ஒரு பஞ்சாயத்து வர்ற மாதிரி தெரியுது!

Post a Comment