Saturday, November 28, 2009

ஆத்திரத்தை அடக்கினாலும்..

ரவை?

கிலோ 30 ரூபாய்.
ரேஷனில் இன்னும் குறையும்.


துப்பாக்கி?

தீபாவளிக்கு வாங்கியது.
மகளுக்கு.


புலி?

வீட்டில் பயன்படுத்துவது
புலி மார்க் புளி.


நவம்பர் 27?

கூட்டுத்தொகை 9.
நல்ல நம்பர்.


பிரபாகரன்?

முன்பு சத்யத்தில் இருந்தான்.
வேறெதிலோ இருக்கிறான் இப்போது.


தமிழ்..

உங்கள் கேள்விகளை நிறுத்துங்கள்.
அவசரமாய் ஒன்னுக்கு போகணும்.

13 comments:

சிவாஜி சங்கர் said...

நெத்தி பொட்டுல அடிச்சா மாதிரி இருக்கு..!!

கலகலப்ரியா said...

நல்லா இருக்கு வேல்ஜி..! நச்....!

க.பாலாசி said...

ஆயிடுச்சுங்களா நண்பரே....

கவிதை வித்யாசமாய் ஜொலிக்கிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

யப்பா..நங்குன்னு மண்டையில ஆறு குட்டு வச்சுட்டீங்க வேல்..

சந்தான சங்கர் said...

ஆறுக்கும்

அடங்காது

ஒன்னு.....!!!

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லாருக்குங்க.

சத்ரியன் said...

//தமிழ்..

உங்கள் கேள்விகளை நிறுத்துங்கள்.
அவசரமாய் ஒன்னுக்கு போகணும். //

வேல்ஜி,

இன்னொரு கன்னத்தில் அறைய வேண்டியதில்லை. ஏனென்றால், அடி விழும் இடம் மூக்கில்..!

(பெருங்கோபக்காரன் போல தெரியுதே)

Unknown said...

செருப்பால அடிச்சது போல ஒரு கவிதை...

பா.ராஜாராம் said...

வேல்ஜி,

நல்லா இருக்கீங்களா?ஒரு மாதத்திற்கு மேலாச்சே,பதிவு போட்டு..வேலைப் பளுவா?

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஜோதிஜி said...

உங்களை நேரில் பார்த்து இருந்தால் கட்டிப்பிடித்து முதத்மே கொடுத்து இருப்பேன்.

கடைசி வரி நச்.

பழைய இடுகையில் உங்கள் முகவரி தெரிந்தது.

உள்ளே வந்தேன்.

சசிகுமார் said...

super

Gayathri said...

hehehe super

Post a Comment