Wednesday, November 11, 2009

திருஷ்டி.

என்னையும் மகளையும்
சுற்றிவைத்த சூடம்
எரிகிறது.

யார் கண்ணையாவது
எரிக்கும் வேளையில்
எங்களையும் எரிப்பார்கள்
வேறு வாசலில்.

கண்களிலிருந்து விடுதலை
சாத்தியமாக இல்லை.
கண்கள் துரத்தாத வாழ்வும்தான்.

'சூடம் நன்றாக எரிகிறதே'
எனப்பார்க்கும் கண்ணுக்கும்
சாத்தியமிருக்கிறது.

14 comments:

S.A. நவாஸுதீன் said...

கவிதைக்கு ஒரு திருஷ்டி சுத்திப் போடுங்க. நல்லா இருக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

//கண்களிலிருந்து விடுதலை
சாத்தியமாக இல்லை.
கண்கள் துரத்தாத வாழ்வும்தான்.//

புரிய சில நேரமானது...

சிந்தனைக்கு ஒரு ஷொட்டு..

கலகலப்ரியா said...

aahaa..! thrushtikku thrushti..!

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சு இருக்கு கவிதை வேல்ஜி!

உயிரோடை said...

ம‌ன‌ம் அபார‌ ச‌க்தி வாய்ந்த‌து. அடுத்த‌வ‌ர் ம‌னஅலை ந‌ம்மை பாதிக்க‌லாம். அது தான் திருஷ்டி என்ப‌தும் ஆகும். எளிமையா ந‌ல்லா இருக்கு க‌விதை

காமராஜ் said...

எய்யா, என்ன இது, கைகுடு.
இந்தக் கவிதைக்கு உலகத் திருஷ்டி பூரா விழட்டும்.
வேறென்ன சொல்ல ?

க.பாலாசி said...

//யார் கண்ணையாவது
எரிக்கும் வேளையில்
எங்களையும் எரிப்பார்கள்
வேறு வாசலில்.//

உண்மைதானே......

கவிதை நல்லாருக்கு அன்பரே....

நசரேயன் said...

திருஷ்டி சுத்தி போடணும் கவுஜக்கு

Anonymous said...

உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். விரும்பினால் தொடரவும். சுட்டி இங்கே

http://amuthan.wordpress.com/2009/11/16/%E0%AE%85-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-z-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/

ராகவன் said...

அன்பு வேல்ஜி,

எளிமையாய் எழுத பழகவேண்டும் வேல்ஜி, உங்களிடம் இருந்து.
வீட்டு முன்னால் கட்டிய படிகாரம், எலுமிச்சம், மிளகாய் வத்தல்கள், பூசணிக்காய், கண்ணத்தில் பெரிதாய் திருஷ்டி பொட்டு எல்லாம் மீறி சூடம் ஏற்றிக் கழித்தாலும் தீராது உங்கள் எழுத்து மீது விழுந்த கண்கள்.

வாழ்த்துக்கள்!

அன்புடன்
ராகவன்

தேவன் மாயம் said...

கண்களிலிருந்து விடுதலை
சாத்தியமாக இல்லை.
கண்கள் துரத்தாத வாழ்வும்தான்.

நல்ல சிந்தனை!!!

சந்தான சங்கர் said...

//'சூடம் நன்றாக எரிகிறதே'
எனப்பார்க்கும் கண்ணுக்கும்
சாத்தியமிருக்கிறது. //

பார்வைகள் பற்றவைத்து
எரியும் சூடம்
பார்வைக்கு திருஸ்டியாம்..!


அருமை வேல்ஜி..

விக்னேஷ்வரி said...

இதை வச்சுக் கூட எழுதலாமா... ரொம்ப நல்லா இருக்குங்க.

velji said...

எல்லோருடைய வரவுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.என்னை ஊக்குவித்த எல்லோருமே கவிதைக்காரர்கள் என்பதில் மகிழ்ச்சி எனக்கு.விக்னேஷ்வரியின் முதல் வரவு.வருகைக்கு நன்றி.

தொடர்ந்து வாருங்கள்,நண்பர்களே.

Post a Comment