செடியுடன்
ஒரு வண்ணத்துப்பூச்சி.
இரை தருவதாய் சொல்லி
ஒரு ஜோடி சிட்டுக்குருவி.
கிடாயை சமாளித்து
தாயிடமும் சொல்லிவிட்டு
ஒரு ஆட்டுக்குட்டி.
இரவில்தானே மின்னுவேன்
என்றதற்கு
பரவாயில்லை என்று சொல்லி
ஒரு மின்மினியை.
எல்லாம் அழைத்துக்கொண்டு
ஒரு பொன்மாலைப்பொழுதில்
உன்னிடம் வந்தேன்.
நிமிர்ந்து பார்த்து
எழுதுவதை தொடர்ந்தாய்.
எதற்கோ உன் கையை உதறிய போது
உடன் வந்த எல்லாமும்
ஓடிப்போயின.
உன்னிடம் சொல்வதற்கு
ஒரு கவிதையும் இருந்தது.
திரும்பவும் தீராத பக்கங்கள்!
14 hours ago
8 comments:
//எதற்கோ உன் கையை உதறிய போது
உடன் வந்த எல்லாமும்
ஓடிப்போயின.
உன்னிடம் சொல்வதற்கு
ஒரு கவிதையும் இருந்தது. //
அழகு....அருமை நண்பரே....
ரொம்ப நல்லா இருக்கு கவிதை. ரசனைவிட என்ன பெரியதாய் கவிதை என்றும்
beutiful velji!
அருமை ,ரொம்ப நல்லா இருக்கு
நன்றாக இருந்தது.
nanru nanbare
//கிடாயை சமாளித்து
தாயிடமும் சொல்லிவிட்டு
ஒரு ஆட்டுக்குட்டி.//
சிந்தனை அபாரம் வேல்...
அனைவருக்கும் மிக்க நன்றி.
Post a Comment