Saturday, October 31, 2009

திருவேங்கடா..!

ஒவ்வொருத்தராய் கொல்வதற்கு
சலித்துப்போனான்.
மொத்தமாய் குழியிறக்கி,
புல்டோசர் ஏற்றி...
ஆயிரமாயிரம் முற்றுப்புள்ளிகள்.

லட்சமாய்
அவலக்குறிகள்
முகாம்களில்.

எஞ்சியவை
கேள்விக்குறிகளாய்
புலம்பெயர்ந்து.

ஆச்சரியக்குறியாய்
உலகின் இறுகியமெளனம்.

இதையெல்லாம் செய்தவனின்
ஆண்குறியை
அறுத்தால் என்ன.

11 comments:

காமராஜ் said...

வேல்ஜி....
சிரிக்கவா..
வேதனைப்படவா,
நாற்காலி நுனிக்கு வந்து
எதாவது நடக்காதா என்று எதிர்பார்க்கிற நேரம்
வரும் கதாநாயகனாக கடைசிவரி.

ராகவன் said...

அன்பு வேல்ஜி,

வீர்யமிக்க கவிதை! கஷ்டமாக இருந்தது படித்தவுடன். வேதனை அதன் உச்சத்தில் இருக்கிற காலகட்டம் இது, மெல்ல மாறும் நிலை வரும்.

வாழ்த்துக்களுடன் அன்பும்,

ராகவன்

vasu balaji said...

அட போங்க.அவ்ளோ சின்ன தண்டனையா?

aambalsamkannan said...

Really touch my heart

ப்ரியமுடன் வசந்த் said...

அறுத்தாலும் அடங்குவாய்ங்கன்னு நினைக்கிறீங்க..

ம்ஹூம்...கொல்லணும்...குடலை உருவி...

பா.ராஜாராம் said...

கோபம் நியாயமானது.ஆனால்,இவ்வளவு கோபமா?கோபம் முன்னாள் இருக்கு வேல்ஜி.கவிதைக்கும் முன்னாள்.

கலகலப்ரியா said...

கோபம் நல்லா இருக்கு வேல்ஜி...!

//அறுத்தால் என்ன. //

ஐயயோ.. அப்டி எதுவும் பண்ணிப்புடாதீய... மதன் கட்டுரைல எழுதினது போல... இப்டி குறைபாடு இருக்கிறவங்கதான் இப்டி வெறிப் புடிச்சு ஜனங்கள கொன்னு குவிக்கிறது... அது அங்க நிறைய பேரு இருக்காங்க... இதில இத வேற பண்ணா.... நல்லா இருக்கிற ஒண்ணு ரெண்டும் நாசமா போய் நாசம் பண்ணிடும்..

velji said...

@@ காமராஜ்
கருத்துக்கு மிக்க நன்றி.

@@ ராகவன்
ஆமாம் ராகவன்,நிலைமை மெல்ல மாற வேண்டும்.
காலங்கள் கடந்தாலும் இந்த வடு நம்மை விட்டு மறையாது.

@@ வானம்பாடிகள்
கருத்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி.
சின்ன தண்டனைக்கு கூட வாய்ப்பில்லையே.முன்கூட்டியே தேர்தல்,மீண்டும் அதிகாரம் என்று சுகமாய் பயணம் தொடர்கிறதே.

@@ சாம்கண்ணன்
கருத்துக்கும்,வரவிற்கும் மிக்க நன்றி.

@@ வசந்த்
சரிதான்.வரவிற்கு மிக்க நன்றி.

@@ பா.ரா.
நம்மளவில் கோபத்தையாவது பதிவு செய்வோம்.புத்தனின் தேசத்தில் அகிம்சை வழி வாழ்வா நட்க்கிறது.
நீங்கள் சொல்வது போல் முன்னால் உள்ள கோபம்தான்.ஆனால் எந்நாளுக்குமான துயரம் இது.
நன்றி பா.ரா.

@@ ப்ரியா
நீங்கள் தொடர்ந்து எழுதும் பதிவிற்கான பின்னூட்டமாய் தோன்றிய எண்ணம் இது.இங்கு வந்து சாமி தரிசனம் வேறு என்ற கோபத்தில் கவிதையானது.
நாசகார எண்ணங்களுக்கு காரணம் அவர்களின் குறைபாடே..அருமை!

க.பாலாசி said...

அன்பரே கொஞ்சம் தாமதம்...மன்னிக்கவும்.

//ஆச்சரியக்குறியாய்
உலகின் இறுகியமெளனம்.//

உங்களின் கவிதை மிகுந்த வலியையும் அதற்கான மருந்தையும் தருகிறது. மருந்தை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

பா.ராஜாராம் said...

வேல்ஜி...உங்கள் கவிதை ஒன்றை நம் தளத்திற்கு எடுத்துட்டு போறேன்...என்னை கவந்த வரிகளுக்காக.நன்றி,மக்கா!

பா.ராஜாராம் said...

மன்னிக்கணும் என்னை கவர்ந்த வரிகள்...

Post a Comment