Wednesday, October 28, 2009

நிகழ்ந்து விடுமோ.

நாளை பற்றி
பேசிய ஒரு நாளில்தான்
நிச்சயமானது உனக்கு.

பின் வந்த நாட்களில்
நினைவுகளை கிழித்த படி
வீதியில் நடந்து வந்தேன்.

உன் வீட்டருகேயும்
வந்து விட்டேன் ஓர் நாள்.

காற்றில் பறந்த நினைவொன்று
உன் அழைப்பு மணி அருகே.

நீ
வந்து விடுவாயோ
என்ற பதட்டத்தில் நின்றேன்
நான்.

14 comments:

ஈ ரா said...

அருமை வேல்ஜி,

ஈ ரா said...

//பாலங்கள் கட்ட ஆசைப்படுபவன்.அணிலாகவும் இருப்பவன்...//

எங்கியோ போயிட்டீங்க தோழரே

சந்தான சங்கர் said...

//நீ
வந்து விடுவாயோ
என்ற பதட்டத்தில் நின்றேன்
நான். //

கிழித்துவிட்ட நினைவுகளை
கடந்து ஒலித்துவிட்ட ஓர்
அழைப்பு மணி

வந்துவிடுவாயோ என்ற
பதட்ட ஏக்கம்.


உணர்வு வேல்ஜி..

உயிரோடை said...

//நீ
வந்து விடுவாயோ
என்ற பதட்டத்தில் நின்றேன்
நான்.//

எந்த‌ கார‌ண‌த்திற்கும் வெளியே வ‌ந்து விடாதே வ‌ந்தாலும் பிச்சைக்கார‌னுக்கு பிச்சை இட்டு திரும்பும் ஈடுபாடு ம‌ட்டும் கொண்டு வா. வ‌ந்த‌ ச‌டுக்கோடு வீட்டிற்குள் திரும்பி விடு. காத‌லாய் அருகில் வ‌ந்தால் அத்தோடு முடிந்து விடும் என் ப‌ய‌ண‌ம் என்று யூமா.வாச‌கி எழுதி இருப்பார் ஒரு க‌விதையில் அது போல‌ இருக்குங்க‌ இந்த‌ க‌விதையும் வ‌ரிக‌ளும். அழ‌கு. வாழ்த்துக‌ள் வேல்ஜி.

புலவன் புலிகேசி said...

//நீ
வந்து விடுவாயோ
என்ற பதட்டத்தில் நின்றேன்
நான்.//
அருமை வேல்ஜி

க.பாலாசி said...

கொஞ்சம் ஃபீலிங்கா இருக்கே தல. கவிதை நல்லாருக்கு...

கலகலப்ரியா said...

superb...!

velji said...

ஈ.ரா.
மிக்க நன்றி.
இல்லை தோழரே..உங்கள் பக்கத்தில் வந்திருப்பதாக நினைக்கிறேன்.

சந்தான சங்கர்
மிக்க நன்றி.
உங்கள் விளக்கத்தில் கவிதை மேலும் உணர்வு பெறுகிறது.

உயிரோடை,
பத்திரப்படுத்த வேண்டிய ஒப்பீடு.மிக்க நன்றி.

புலவன் புலிகேசி

மிக்க நன்றி.

கலகலப்ப்ரியா

மிக்க நன்றி.

விஜய் said...

ரொம்ப நல்ல இருக்கு

பா.ரா கவிதை போல்

வாழ்த்துக்கள்

விஜய்

ராகவன் said...

அன்பு வேல்ஜி,

கவிதை அருமை! காற்றில் பறந்த நினைவொன்று உன் அழைப்பு மணி அருகே! இறகு போல மிதந்து, மிதந்து மனசுக்குள் உட்காரும் ஒரு கவிதை.

அன்புடன்
ராகவன்

நசரேயன் said...

//நீ
வந்து விடுவாயோ
என்ற பதட்டத்தில் நின்றேன்
நான்.//

ஏன் அடி விழுமுன்னா?

அன்புடன் மலிக்கா said...

/நீ
வந்து விடுவாயோ
என்ற பதட்டத்தில் நின்றேன்
நான்/

பதட்டத்தில் படபடத்தமனதை பொத்தியபடியே
விழிகளைமட்டும் ஓரமாய் திறந்துபார்ததுபோலிருந்தது.

தாங்களின் கவிதை அருமை...

velji said...

க.பாலாசி.
பீலிங்'க்கு நன்றி.

விஜய்.
நீங்கள் பா.ரா.கவிதை போல என சொன்னது ஒரு அவார்டு!

ப.ராகவன்.
'மனசில் உட்காருகிறது'-எழுதுபவனுக்கு இதுதானே வேண்டும்.

நசரேயன்.
'ஏனுங்கண்னா..'

அன்புடன் மலிக்கா
கருத்திற்கும்,வரவிற்கும் மிக்க நன்றி.

பா.ராஜாராம் said...

உண்மையில்,இவ்வளவு இறகு மாதிரியான கவிதை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு வேல்ஜி.ஒரு உணர்வின் தூக்கல்தான் கவிதை பிறப்பு!பாரா பாரா என சொல்லி என்னை தயவுகூர்ந்து உங்களில் இருந்து தனிமை படுத்திவிடாதீர்கள் விஜய்,வேல்ஜி!இந்த கவிதையின் காலடியில் தூங்க இந்த தருணம் விருப்பமாகிறது.மனிதர்களுக்கு மேல் பெரிய கவிதையை இன்னும் எந்த கவிஞனும் எழுத துவங்கவில்லை. அல்லது உன்னத கவிதையை!
தெளிந்த கவிதை வேல்ஜி!

நீங்கள்தான் நானும் வேல்ஜி,விஜய்!அன்பிற்கு நன்றி மக்காஸ்!

Post a Comment