Saturday, October 24, 2009

ஒழிந்து போகட்டும்!

சட்டமிடப்பட்ட
சவவாழ்க்கை.

எப்போதேனும் விழுகிறது
சாரலோ
ஒளிக்கீற்றோ.

பெருமழை பெய்யினும்
தீயே பற்றியும்
சட்டமுடைத்தா வெளியேறுகிறது
வாழ்க்கை?

நாங்கள் மொத்தமும்
சவக்கூட்டமாய் ஆனபின்பு
இதைப்பற்றி பேசியென்ன.
சொல்லிப்போனான்
ஈழத்தமிழன்.

விண்கல் மோதட்டும்
உங்கள் புவி மீது
என்றும் சொன்னான்.

கடல் ஊர்புகும்.
தூசு மண்டலமாய்
எங்கும் இருள் சூழும்.

அப்புறம்
புதிய உயிர் தோன்றுமோ!

14 comments:

பிரபாகர் said...

நண்பா.... வலியோடு உணர்த்தியிருக்கிறீர்கள்.

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

//நாங்கள் மொத்தமும்
சவக்கூட்டமாய் ஆனபின்பு
இதைப்பற்றி பேசியென்ன.//

வலி நிறைந்த வரிகள் நண்பா....

க.பாலாசி said...

//பெருமழை பெய்யினும்
தீயே பற்றியும்
சட்டமுடைத்தா வெளியேறுகிறது
வாழ்க்கை?//

புதுமாதிரியாய் உங்கள் கவிதை வலியுடன்.

ப்ரியமுடன் வசந்த் said...

//பெருமழை பெய்யினும்
தீயே பற்றியும்
சட்டமுடைத்தா வெளியேறுகிறது
வாழ்க்கை?//

ம்

:(

என்ன பண்ண?

வலியோடு சோகத்தை கூட்டிய கவிதை...

ராகவன் said...

அன்பு வேல்ஜி,
முதல் இரண்டு வரிகளில் கவிதை முழுவதும் படமாய் விரிகிறது. ஈழத்தமிழனின் வாழ்க்கை எரியூட்டில் புடைத்தெழும் பிணங்களாய் கூட இல்லை, என்பது தெரிவான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு இன்னும் சில வார்த்தைகளை குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது, அது கவிதையின் அடர்த்தியை அதிகரித்திருக்கும் என்று நினைக்கிறேன். இது என்னுடைய கருத்து மாத்திரமே.

அன்புடன்,
ராகவன்

கலகலப்ரியா said...

:)..!

சந்தான சங்கர் said...

//சட்டமிடப்பட்ட
சவவாழ்க்கை.//

அர்த்தமிட்ட வார்த்தை
அர்த்தமிழந்த ஈழம்
ஈரமிழந்த தேசத்தில்
ஈக்கள் மட்டுமே மிஞ்சியது
உறைந்துவிட்ட
குருதியின் கருதி...

http://sankar-mylyrics.blogspot.com/2009/10/blog-post_11.html

உயிரோடை said...

//சட்டமிடப்பட்ட
சவவாழ்க்கை//

இதை

சட்டமிடப்பட்ட வாழ்க்கை என்று கொண்டால் அனைவர்க்கும் இந்த நிலை இருக்கும் ஏதேனும் ஒரு விதத்தில் மீன் தொட்டி மீன்களை போலத் தானே நாம் வீடு, அலுவலகம் சொந்தங்கள் என்று ஒரு சுற்றுகுள்ளே தானே நாம் அனைவரும்....

பா.ராஜாராம் said...

கவிதைகளை லாவகமாய் கைகொள்ள துவங்கிவிட்டீர்கள் வேல்ஜி.ராகவன் சொன்னதில் எனக்கும் உடன்பாடே.அவர் சொன்னதை செய்தால் கவிதையில் அடர்த்தி கூடும் வேல்ஜி.அன்பு இருக்கு உங்களிடம்.ஏற்க்க இயலும் என தெரியும்.நன்றி மக்கா.

velji said...

பிரபாகர்

புலவன் புலிகேசி

க.பாலாசி

வசந்த்

ராகவன்

கலகலப்ரியா

சந்தான சங்கர்
(படித்து கருத்தை பதிவிட்டேன் நண்பா.மிக்க நன்றி)

உயிரோடை

பா.ரா.

அனைவரின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
சமீபத்தில் வலைஉலகிற்கு வந்த எனக்கு உங்களின் வார்த்தைகள் மிகுந்த உற்சாகமாக இருக்கிறது.நீங்கள் தொடர்ந்து வரும் விதத்தில் எழுத முயற்சிக்கிறேன்.

velji said...

இந்தக் கவிதையில் 'இது என்ன வாழ்க்கை' என சலிப்புற்று ஒருவன் (உயிரோடை சொல்வது மாதிரி) சிந்திக்கையில் கடந்துபோகும் ஈழத்தமிழன் ஒழிஞ்சி போங்க என சொல்ல ,சரிதான்...எல்லாம் அழிஞ்சி புதிய நம்பிக்கைகள் தோன்றுமோ என அவனே சிந்திக்கும் படி ' எழுத முயற்சித்தேன்.

விளக்கம் அனைவருக்கும்..,குறிப்பாய் ராகவன்,உயிரோடை மற்றும் பா.ரா அவர்களுக்கும்.

ராகவன்..உங்கள் கருத்து எப்போதுமே ஒரு analysis ஆக இருக்கிறது.நீங்கள் வந்தால் சந்தோஷம்தான்.

பா.ரா....உங்கள் கவிதைகள் உயிரினங்கள் போலவே தோன்றுகிறது எனக்கு.நீங்கள்'நல்லா எழுதுய்யா' என்றே சொல்லலாம்.

காமராஜ் said...

நல்ல கவிதை. நல்ல கோபம்.
பக்கத்துவீட்டில் பற்றிய தீ
சட்டைப்பையை பற்றும் வரை
என்று சொன்ன கோபத்தை நினைக்கத்தோணுகிறது.
நானும் பரா, பாரா இரண்டுபேரையும் வழிமொழிகிறேன்.
உங்களிடம் கவிதைக் கை இருக்கிறது.

சத்ரியன் said...
This comment has been removed by the author.
சத்ரியன் said...

வேல்ஜி,

பேரிகை பெருஞ்சத்தத்துடன் முழங்குகிறது.ஒட்டுமொத்த உலகின் செவிப்புலனும் செவிடாய் நடிக்கிறது.

இந்த வரிகள், இப்போது கனக்கச்சிதமாய் பொருந்துகிறது.

//ஈழத்தமிழன்.
சவக்கூட்டமாய் ஆனபின்பு
இதைப்பற்றி பேசியென்ன. //

Post a Comment