வாழ்க்கை புறந்தள்ளிப் போக
நடுத்தெருவில் நிற்கும் நிலை
அநேகருக்கு நேர்கிறது.
நானும் நின்றேன் ஓர் நாள்.
பயணச் சீட்டு இல்லாதவன்
போய்க்கொண்டுதான் இருந்தான்.
வழி தெரியாது பயனித்தவன்
வழி சொல்லிப் போனான்.
எல்லைக்கோட்டருகே
ஆமைகளைப் பார்த்தபோது
மூச்சிரைத்தது எனக்கு.
சாதுர்யம் கற்று
கனவுகளைத் தொலைத்த
ஓர் கணத்தில் தென்பட்டது
எனக்கென ஒரு வழி.
சாத்தா - கவனிக்கப்பட வேண்டிய நாவல்
5 weeks ago
15 comments:
//சாதுர்யம் கற்று
கனவுகளைத் தொலைத்த
ஓர் கணத்தில் தென்பட்டது
எனக்கென ஒரு வழி. //
வாழ்வினை செம்மையாக்கும் வழி....தொடர்ந்து செல்லுங்கள்.
நல்ல கவிதை....
nalam.........!
//பயணச் சீட்டு இல்லாதவன்
போய்க்கொண்டுதான் இருந்தான்.
வழி தெரியாது பயனித்தவன்
வழி சொல்லிப் போனான்//
excellent...!
நல்லா இருக்குங்க வேல்
வாழ்த்துக்கள்
விஜய்
யதார்த்தமாய் அற்புதமாய் உள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே!
//சாதுர்யம் கற்று
கனவுகளைத் தொலைத்த
ஓர் கணத்தில் தென்பட்டது
எனக்கென ஒரு வழி. //
இழப்பைச்சொல்லாமல் சொல்லும் கவிதை
அற்புதமாக உள்ளது நண்பரே........
அருமையாக இருந்தது!
க.பாலாசி
இரசிகை
கலகலப்ப்ரியா
கவிதை(கள்)
பிரபாகர்
காமராஜ்
புலவன் புலிகேசி
பப்பு
அனைவரின் வருகைக்கும்.கருத்துக்கும் மிக்க நன்றி.
நல்ல வார்த்தை பிரயோகம்
வந்தேன்.
/எல்லைக்கோட்டருகே
ஆமைகளைப் பார்த்தபோது
மூச்சிரைத்தது எனக்கு.
சாதுர்யம் கற்று
கனவுகளைத் தொலைத்த
ஓர் கணத்தில் தென்பட்டது
எனக்கென ஒரு வழி. /
அர்த்தமுள்ள வரிகள். நன்றாக உள்ளது.
நன்றி வசந்த்.
வருகைக்கு நன்றி முத்துவேல்!
நல்ல கவிதை இது வேல்ஜி.
//பயணச் சீட்டு இல்லாதவன்
போய்க்கொண்டுதான் இருந்தான்.
வழி தெரியாது பயனித்தவன்
வழி சொல்லிப் போனான்//
எல்லாமே மேலே உள்ளவை போல அர்த்தமுள்ள வரிகள்தான்.
உங்கள் அத்தனை கவிதைகளையும் படித்து முடித்ததும் என்னுள் உருவான இந்த அதிகாலை தாக்கம் விலக நீண்ட நேரமாகும்.
பத்திரிக்கைகளில் வருவதற்கும், அங்கே உள்ள மெத்தப்படித்தவர்களின் தேர்வுக்கும் உங்கள் ஆச்சரியப்படவைக்கும், ஆதங்கப்படவைத்த, அதிசியமாய் உள்ள இந்த இத்தனை வரிகளும் எத்தனை வித்யாசம்.
தமிழன் என்பவனும், தமிழனின் திறமை என்பது இது போன்ற தேடலில் மட்டும் தான் கிடைக்கும் போல் இருக்கு.
இவர்களின் அத்தனை பேர்களின் ஆண்குறி என்பது தேவைதானா?
தாமிரபரணி ஊற்று முழுமையாக இருக்கிறது. பெருமையாக இருக்கிறது. உங்களைப் போனறவர்களின் ஜெயபேரிகை என்னுடைய பகிர்ந்து தொடர்ந்து கொண்டுருப்பது.
இது ஒன்றே போதாதா?
இறப்புக்கு முன் நம்முடைய கடமை ஏதாவது?
ஒன்று யோசிக்கும் போதே உங்கள் வருகையின் மூலம் உங்கள் எழுத்துக்கள் வாசிக்கும் பாக்யம்.
என்ன செய்வது ஆதங்கம் மூலம் தானே தங்கத்தை உணர முயற்சிக்க வேண்டும். ஒவ்வொருவரையும் உணர முயற்சிக்கும் போது உள்வாங்கும் போது மொத்தமும் நமக்கு புரிகிறது. நம்முடைய தகுதியும் நமக்குத் தெரிகிறது.
அந்த வகையில் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் முக்கியமானவர் தானே?
இனி தொடர்ந்து விடுவேன்.
Post a Comment