Saturday, September 1, 2012

ரோசாப்பூவு ........

ரோசாப்பூவு   தூங்கப்போகுது
பாடுறேன்  ஒரு பாட்டு
நான் பாடுறேன் ஒரு பாட்டு
வார்த்தைய தேடுறேன் வார்த்தைய தேடுறேன்
தேனும் பாலும் தொட்டு
நல்ல தேனும் பாலும் தொட்டு


சூரியனார் பகலில் வந்து
ஆடிக்களிச்சாங்க
விளையாடி ஓய்ஞ்சாங்க
இப்ப சந்திரனார் பக்கம் வந்து
காவல் இருக்காங்க -உனக்கு
காவல் இருக்காங்க
உன்னழகை நட்சத்திரம் ஒன்னு
மின்னி மின்னி பாத்துச்சும்மா
அது மின்னி மின்னி பாத்துச்சும்மா ...
மொத்தக்கூட்டத்தையும் கூட்டிவந்து
முழிச்சு கிடக்குதம்மா
கண் மலர்திக்கிடக்குதம்மா ...                             (ரோசாப்பூவு...)

ஆசிரியர்  சொல்வதெல்லாம்
அறிவுப்பாடமம்மா
அந்த கல்வி செல்வமம்மா
அம்மா அப்பா சொல்வதெல்லாம்
அனுபவப்பாடமம்மா
அது அன்புப்பாடமம்மா


நண்பரைசேர்த்து  உறவைபெருக்கி
நாளும் வளரணுமே
 நீ நாளும் வளரணுமே
நாலும் தெரிஞ்சி ஊரும் புரிஞ்சி
நல்லா வாழனுமே
நீ நல்லா வாழனுமே ....                                 (ரோசாப்பூவு .....)

நாளைய  உலகை  ஆளப்போற
இப்ப தூங்கு அம்மு ...
நீ இப்ப தூங்கு அம்மு

அம்மு  செல்லக்குட்டி ....
அம்மு  வெல்லக்கட்டி ....
அம்மு சீனிக்கட்டி .....


இது என் மகளுக்காக எழுதிய தாலாட்டுப்பாடல்.கொஞ்சம் லேட்டா அவளோட 9 வயசுல எழுதினது.ஆனா அவ ரொம்ப சந்தோசப்பட்டா....
                                        

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்களுக்கும் சந்தோசம்... ரொம்ப நல்லா இருக்குங்க...

/// நாலும் தெரிஞ்சி ஊரும் புரிஞ்சி
நல்லா வாழனுமே
நீ நல்லா வாழனுமே... /// அருமை...

வாழ்த்துக்கள்...

பட்டிகாட்டான் Jey said...

ஹி வேல் எப்படி இருக்கே ?

இன்னும் ஒரு 12 வருசம் பொறுத்திருந்தா பேத்திக்கு இத பாடியிருக்கலாம்.

இப்ப பாடுனதுக்கு பொண்ணு சந்தோசப்பட்டானு வேற சொல்லிட்டே....

ஆமா பிலாக் பாஸ்வேர்டெல்லாம் எப்படியா இத்தனநாள் கழிச்சி ஞாபகம் வச்சிருந்தே... :)

maestro said...
This comment has been removed by the author.
velji said...

நன்றி தனபாலன்....

ஜெய் ..எப்படி இருக்க ...?
ஆமா ....ரொம்ப நாள் ஆயிருச்சி..!

பட்டிகாட்டான் Jey said...

vel, pattikattaan@gmail.com, send your no. to this mail i'll call you.

Post a Comment